சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பாரத்மாலா பரியோஜனாவின்கீழ், நவீன பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவின் விரைவான மேம்பாட்டுக்காக முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 24 AUG 2022 3:21PM by PIB Chennai

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் நவீன பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவின் விரைவான மேம்பாடு, சரக்கு ஒருங்கிணைப்பை மையப்படுத்துதல், சர்வதேச தரத்துக்கு இணையாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்துக்கும்கீழ், தளவாட செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ்துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் ஜெனரல் (ஓய்வு) திரு.வி.கே.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தை வரவேற்று பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது தடையற்ற மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். நவீன பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா, சரக்குகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும் என்றும், இது கதி சக்தி மூலம் நாட்டை முன்னேற்றும் எனவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் விரைவான, திறமையான பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற தளவாட இயக்கங்களுக்காக, பாரத்மாலா பரியோஜனாவின் பரிந்துரை மற்றும் முயற்சியை நடைமுறைப்படுத்த முன்மொழிவதற்கான வரலாற்று தருணம் இது என்று, திரு.சர்பானந்த சோனோவால் கூறினார். மேலும், பிரதமர் கதி சக்தி மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்த ஊக்கமளிப்பதே பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்றும், இந்த ஒப்பந்தம் அதற்கான தீவிர முயற்சி என்றும் தெரிவித்தார். இத்தகைய பூங்காக்கள் மூலம், நாட்டுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். தளவாட இயக்கத்தின் சிக்கல்களை களைந்து, பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், தளவாடத் துறைகளை உயிர்ப்பிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பூங்காவில், ரயில் மற்றும் சாலைகளில் சரக்குகளை கையாளும் வசதி, கொள்கலன் முனையங்கள், சரக்கு முனையங்கள், கிடங்குகள், குளிர் சேமிப்பு அறைகள், இயந்திர மயமாக்கப்பட்ட பொருட்களை கையாள்வதற்கான வசதிகள், மதிப்புக் கூட்டப்பட்ட சேவையான சேமிப்பு வசதிகள், கிடங்கு மேலாண்மை, சோதனை செய்யும் வசதி மற்றும் சுங்க அனுமதி பெறுதல் உள்ளிட்டவை உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854113

                                                                                                                      ***************



(Release ID: 1854153) Visitor Counter : 214