எஃகுத்துறை அமைச்சகம்
கனிமம் மற்றும் உலோகத் துறையில், ஆதார வளங்கள் மற்றும் சுழற்சி பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 25 புதுதில்லியில் நடைபெறுகிறது
Posted On:
24 AUG 2022 1:34PM by PIB Chennai
இந்திய உலோகங்கள் நிறுவனத்தின் புதுதில்லி பிரிவு, ஆகஸ்ட் 25 முதல் 27 வரை, புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் (அறை எண்-5), 13-வது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில், இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், “கனிமம் மற்றும் உலோகத் துறைகளில் ஆதார திறன்கள் மற்றும் சுழற்சி பொருளாதாரம்” என்று வைக்கப்பட்டுள்ளது. கனிமங்களை வெட்டி எடுக்கும்போது, பூமியில் தங்கி விடுவதை குறைப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த, குறைந்த செலவில், ஆற்றல் மிக்க உத்திகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்க உலோகத் தொழிலுக்கான பரிந்துரைகள் மற்றும் அணுகுமுறைகளை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
இந்த மாநாட்டை, மத்திய உலோகம் மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிராதித்ய சிந்தியா ஆகஸ்ட் 26 2022 அன்று தொடங்கி வைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854079
***************
(Release ID: 1854129)
Visitor Counter : 207