சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் சிறப்பான அமலாக்கத்திற்காக தேசிய சுகாதார ஆணையம் வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
22 AUG 2022 4:17PM by PIB Chennai
மருத்துவமனைகள், சுகாதார நல மையங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார ஆணையம் வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடர்பான மென்பொருள், அதற்கான திட்டமிடுதல், மதிப்பீடு, தகவல் தொடர்பு சாதன வன்பொருள் கொள்முதல் ஆகியவற்றை இந்த வன்பொருள் கொள்கை விளக்குகிறது.
இதுகுறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர். எஸ். ஷர்மா, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் முதல்படியே மருத்துவமனைகள் டிஜிட்டலை நோக்கி முன்னேறுவதுதான் என்றார். மேலும், சுகாதார சேவைகளின் தேவையை பொறுத்து, தகவல் தொடர்பு வழிமுறைகளை கொண்ட கொள்கையை உருவாக்க பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாநிலங்கள் தங்களது சுகாதார நிறுவனங்களில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பின்பற்றும் வகையில் இந்த வன்பொருள் கொள்கையை தேசிய சுகாதார ஆணையம் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டில் உள்ள மருத்துவமனைகளை டிஜிட்டல் ஒன்றோடு ஒன்று இணைத்து எளிய வாழ்தலை ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஊக்குவிக்கிறது.
இந்த வன்பொருள் கொள்கையை https://abdm.gov.in:8081/uploads/Hardware_Guidelines_ABDM_e162cf7a7b.pdf என்ற இணைப்பின் மூலம் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853603
(रिलीज़ आईडी: 1853680)
आगंतुक पटल : 280