தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஜூன், 2022 இல் இபிஎஃப்ஓ 18.36 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்தது
प्रविष्टि तिथि:
20 AUG 2022 5:14PM by PIB Chennai
ஆகஸ்ட் 20 – ல் வெளியிடப்பட்ட இபிஎஃப்ஓவின் தற்காலிக ஊதியத் தரவின்படி, ஜூன், 2022 இல் 18.36 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. ஜூன், 2022 இல் நிகர உறுப்பினர் சேர்த்தல் 9.21% அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த உறுப்பினர்களில் 18.36 லட்சம் பேரில், சுமார் 10.54 லட்சம் புதிய உறுப்பினர்கள். முதல் முறையாக இபிஎஃப் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 7.82 லட்சம் நிகர உறுப்பினர்கள் வெளியேறிய போதிலும், தங்கள் வேலையை மாற்றிக்கொண்டு மீண்டும் இபிஎஃப்ஓவில் இணைந்தனர். கடந்த நிதியாண்டில் பதிவான மாதாந்திர சராசரியை விட இந்த மாதத்தில் புதிய பதிவுகள் அதிகம்.
2022 ஜூன் மாதத்தில் 22-25 வயதுக்குட்பட்டவர்கள் 4.72 லட்சம் சேர்க்கைகளுடன் அதிக எண்ணிக்கையிலான நிகரப் பதிவுகளை பதிவு செய்துள்ளனர் என்பதை ஊதியத் தரவின் வயது வாரியான ஒப்பீடு சுட்டிக்காட்டுகிறது. முதல் முறையாக வேலை தேடுபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட துறை பணிகளில் சேருவதை இது காட்டுகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள், மாதத்தில் சுமார் 12.61 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளன, இது மொத்தத்தில் 68.66% ஆகும். பாலின வாரியான பகுப்பாய்வு, கடந்த மாதத்தில் 3.43 லட்சமாக இருந்த நிகர பெண் உறுப்பினர்களின் சேர்க்கை நடப்பு மாதத்தில் 4.06 லட்சமாக அதிகரித்துள்ளது, இது 18.37% அதிகரித்துள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853319
***************
(रिलीज़ आईडी: 1853340)
आगंतुक पटल : 264