பாதுகாப்பு அமைச்சகம்

மொரிஷியஸுக்கு ஐஎன்எஸ்வி தாரிணியின் கடல் பயணம்

Posted On: 20 AUG 2022 10:38AM by PIB Chennai

கோவாவில் இருந்து மொரிஷியசின் போர்ட் லூயிஸ் வரையிலான கடல் பயணத்தை ஐஎன்எஸ் மண்டோவியின் காமாண்டிங் அதிகாரி சஞ்சய் பாண்டா கொடியசைத்து துவக்கி வைத்தார். INSV தாரிணி பாய்மரக் கப்பலில் ஆறு பேர் கொண்ட குழுவினர் (மூன்று பெண் அதிகாரிகள் உட்பட) இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

 கிட்டத்தட்ட 2500 கடல் மைல் (சுமார் 45000 கி.மீ) தூரத்தை 20 - 21 நாட்களுக்குள் கடக்கும் குழுவினர், தீவிர வானிலை மற்றும் பருவமழையின் கரடுமுரடான கடல் நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இந்திய கடற்படை இந்த வகையைச் சேர்ந்த ,  மஹதேய், தாரிணி, புல்புல், ஹரியால், கடல்புறா,  நீலகண்ட் ஆகிய 6 கப்பல்களை கொண்டுள்ளது.

இந்தக் கடல் பயணம் கடினமான சாகசம் மிக்கதாகும்.  பயணங்கள் சாகச உணர்வை வளர்ப்பதற்கும், ஆபத்தை எதிர்நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன, அதே சமயம் வழிசெலுத்தல், தகவல் தொடர்பு, என்ஜின்கள் மற்றும் உள் இயந்திரங்களின் தொழில்நுட்ப செயல்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய கடல்சார் திறன்களை மேம்படுத்துகிறது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853267

 

 **************



(Release ID: 1853287) Visitor Counter : 182