பாதுகாப்பு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், மணிப்பூர் தலைமையகத்தில் உள்ள அசாம் ரைஃபிள்ஸ் (தெற்கு) படையினருடன் கலந்துரையாடினார்
Posted On:
19 AUG 2022 10:44AM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், ஆகஸ்ட் 19 2022 அன்று, மணிப்பூரின் மந்திரிபுக்கிரியில் உள்ள அசாம் ரைஃபிள்ஸ் (தெற்கு) படையினரின் தலைமையகத்துக்கு சென்று, ரெட் ஷீல்டு பிரிவினர் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினருடன் கலந்துரையாடினார். அவருடன் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்த பயணத்தின்போது, மாநிலத்தில் அமைதி நிலவுவதற்காக, இந்திய-மியான்மர் எல்லையில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது பேசிய திரு.ராஜ்நாத் சிங், மணிப்பூரில் நிலவும் வானிலை உள்ளிட்ட சவால்களுக்கு இடையே, துணிச்சலுடனும், உறுதியுடனும் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரை சந்திப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853050
***************
(Release ID: 1853095)
Visitor Counter : 182