பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'சுயபரிசோதனை: ஆயுதப்படைகளுக்கான தீர்ப்பாயம்' என்ற தேசிய கருத்தரங்கை புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 19 AUG 2022 9:20AM by PIB Chennai

பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்துள்ள, 'சுயபரிசோதனை: ஆயுதப்படைகளுக்கான தீர்ப்பாயம்' என்ற தேசிய கருத்தரங்கை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுதில்லியில் நாளை (ஆகஸ்ட் 20 2022) தொடங்கி வைக்கிறார். முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், போரில் வீரமரணமடைந்த வீரர்களின் விதவைகள், ஆயுதப்படைகளில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு விரைவான மற்றும் விரைவான மற்றும் செலவற்ற நீதி கிடைப்பதற்காக நிறுவப்பட்ட தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

இந்த கருத்தரங்கின் நோக்கம், தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பது மற்றும் விரைவான நீதியை பெறுவதில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதாகும்.

இந்த கருத்தரங்கில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை விருந்தினராகவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்புத்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் எழுச்சிநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இது நடத்தப்படுகிறது.

***************

(Release ID: 1853017)


(Release ID: 1853061) Visitor Counter : 140