அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
“பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு நீலப்புரட்சியை ஏற்படுத்த, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், மீன் உற்பத்தியை ஆதரிக்கிறது”
Posted On:
18 AUG 2022 1:02PM by PIB Chennai
மிகவேகமாக வளர்ந்து வரும் துறைகளில், மீன்உற்பத்தி துறையும் ஒன்றாகும். நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த துறைகளின் வளர்ச்சியில் மீன்உற்பத்தித்துறை முக்கியமாக உள்ளது. இந்தத்துறை ‘சூரிய உதயத்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இது சமமான மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சியின் மூலம், மகத்தான ஆற்றலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இந்தத்துறை, நாட்டின் 14.5 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும், 28 மில்லியன் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை தக்க வைத்து கொள்வதற்கும் ஒரு இயந்திரமாக பயன்படுகிறது. எனவே, இத்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் புதுமையான முடிவுகள் மூலம் தீர்வு காண முன்வருமாறு இளைய தொழில்முனைவோருக்கு இந்தத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதனை ஊக்குவிக்க, பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை, மீன்வளத்துறையின் மூலம், நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சியால் நீலப்புரட்சியை ஏற்படுத்த, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. மீன் உற்பத்தியை, 2024-25-ம் ஆண்டுக்குள், 220 லட்சம் மெட்ரின் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் சரசாரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாகும். இந்த லட்சிய திட்டம், ஏற்றுமதி வருவாயை ரூ.1,00,000 கோடியாக உயர்த்துவதையும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீன்வளத்துறையில் சுமார் 55 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீன்வளத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மொத்தம் 29.78 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில், 8.42 கோடி ரூபாய் கடன் உதவி வழங்குவதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழுள்ள, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் கையெழுத்திட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852812
***************
(Release ID: 1852918)
Visitor Counter : 268