வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23-இல் வேளாண் ஏற்றுமதியை 23.56 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த அபெடா புதிய உத்தி

प्रविष्टि तिथि: 14 AUG 2022 1:00PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் விளைப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா) 2022-23 நிதியாண்டில் 23.56 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான உத்தியை வகுத்துள்ளது.

இதன்படி, பல்வேறு முக்கிய வெளியீடுகள், மின்னணு தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் உதவியுடன் சாத்தியமான தயாரிப்புகளின் பட்டியலை முன்னிலைப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள், உணவு பதப்படுத்துபவர்கள், தளவாடங்கள் வழங்குநர்கள், அந்நிய செலாவணி மேலாண்மை நிறுவனங்கள் போன்றவற்றுடன் வலுவான மற்றும் வழக்கமான தொடர்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளங்களில், சாத்தியக்கூறுகள் உள்ள பொருட்களின் பட்டியல் காட்சிப்படுத்தப்படும். இது தவிர இந்தியாவின் ஏற்றுமதிக்கு சாத்தியமான தயாரிப்புகளின் நாடு வாரியான மற்றும் பொருட்கள் வாரியான குறிப்பிட்ட தேவைகள் ஏற்றுமதியாளர்களுக்காக அபெடா தளத்தில் குறிப்பிடப்படும்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருப்பதற்கு இணங்க வளர்ந்து வரும் வேளாண் தொழில்முனைவோருக்கு செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை வழங்கி, வேளாண் ஏற்றுமதியை கவரக்கூடிய தொழிலாக அவர்கள் தேர்ந்தெடுக்க ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. புவிசார் குறியீட்டு பொருட்கள் குறித்து பங்குதாரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளை வடகிழக்கு பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851724

***************


(रिलीज़ आईडी: 1851781) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Marathi , Telugu , Manipuri , English , हिन्दी