குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 AUG 2022 5:54PM by PIB Chennai

76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, நாளை (ஆகஸ்ட் 14,   2022) நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 

இந்த உரை, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் இரவு 7 மணிக்கு ஹிந்தியில் ஒலிபரப்பப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெறும்.   தூர்தர்ஷனில், ஹிந்தி மற்றும் ஆங்கில ஒலிபரப்புகளைத் தொடர்ந்து, மண்டல அலைவரிசைகளில் அந்தந்த பிராந்திய மொழிபெயர்ப்பும் இடம்பெறும்.   அகில இந்திய வானொலியின், பிராந்திய அலைவரிசைகளில் அந்தந்த பிராந்திய மொழி ஒலிபரப்பு இரவு மணி 9.30-க்கு இடம்பெறும். 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1851586) வருகையாளர் எண்ணிக்கை : 264
இந்த வெளியீட்டை படிக்க: English , Manipuri , Urdu , Marathi , हिन्दी , Punjabi