மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இல்லந்தோறும் மூவர்ணக்கொடியேற்றும் நிகழ்ச்சியை மத்திய அரசு கொண்டாடுகிறது
Posted On:
12 AUG 2022 2:41PM by PIB Chennai
இல்லந்தோறும் மூவர்ணக்கொடியேற்றும் நிகழ்ச்சியை மத்திய அரசு 11-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை கொண்டாடுகிறது. விடுதலையின் அமிர்தப்பெருவிழா ஆண்டின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய அரசு நாடு முழுவதும் 400 சிறப்பு வாய்ந்த இடங்களில் இதனை கொண்டாடுகிறது.
மத்திய கால்நடை பாராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மீன்வள அமைச்சகம் ஆகியவை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமைப்பு, வல்சாத் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை குஜராத் மாநிலம் நவ்சாரிக் அருகே உள்ள தண்டி தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவுச் சின்னம் அருகே, இந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபலா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
***************
(Release ID: 1851205)
(Release ID: 1851221)
Visitor Counter : 211