பாதுகாப்பு அமைச்சகம்
மலேசியா நடத்தும் இருதரப்பு பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பு
Posted On:
12 AUG 2022 1:51PM by PIB Chennai
'உதாரா சக்தி' என்ற தலைப்பில் நடைபெறும் இருதரப்பு பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப் படையின் ஒருபிரிவு இன்று மலேசியா புறப்பட்டு சென்றது. இது இந்திய விமானப்படைக்கும், ராயல் மலேசிய விமானப்படைக்கும் இடையே நடக்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சியாகும்.
இந்திய விமானப்படை, எஸ்யூ 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்களுடன் வான்பயிற்சியில் ஈடுபடுகின்றன. ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானம் வான்பயிற்சியில் பங்கேற்கிறது. இந்திய விமானப்படையின் குழு, அதன் விமானத் தளம் ஒன்றிலிருந்து மலேசியாவின் குந்தன் விமானத் தளத்திற்கு நேரடியாக சென்றது.
இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும்.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இரு நாட்டு விமானப்படைகளுக்குமிடையே, பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் அளிக்கப்படும். உதாராசக்தி பயிற்சி இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும்.
***************
Release ID: 1851187
(Release ID: 1851220)
Visitor Counter : 244