உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புலனாய்வுத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்’2022 அறிவிப்பு

प्रविष्टि तिथि: 12 AUG 2022 12:45PM by PIB Chennai

2022-ஆம் ஆண்டில் “புலனாய்வுத் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்” 151 காவல்துறையினருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கம் 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. குற்றப் புலனாய்வுப் பணியில், உயர் தொழில் தரத்தை ஊக்குவிப்பதுடன், இது போன்ற புலனாய்வுப் பணியில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த ஆண்டு 28 பெண் அதிகாரிகள் உட்பட மொத்தம் 151 பேர் தேர்வு விருது பெற செய்யப்பட்டுள்ளனர். விருது பெறுவோரில் அதிகபட்சமாக 15 பேர் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டிலிருந்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திருமதி ஏ கனகேஸ்வரி, ஆய்வாளர்கள் திருமதி கே அமுதா, திருமதி எஸ் சசிகலா, திருமதி பாண்டி முத்துலக்ஷ்மி,  உதவி ஆய்வாளர் திரு ஆர் செல்வராஜன் ஆகிய 5 பேர் உள்துறை அமைச்சரின் பதக்கம் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851166

------ 

(Release ID: 1851166)


(रिलीज़ आईडी: 1851211) आगंतुक पटल : 431
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , Bengali , Odia , English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Telugu