தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கங்ரா மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பான வளர்ச்சிக்கு மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வாழ்த்து

Posted On: 11 AUG 2022 4:12PM by PIB Chennai

கங்ரா மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பான வளர்ச்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று (11.08.2022) வாழ்த்து தெரித்தார்.  ரூ. 46 கோடி அளவிற்கு நட்டத்தில் இயங்கிவந்த இந்த வங்கி நான்கே வருடங்களில் கடந்த நிதியாண்டில் ரூ.87 கோடி அளவிற்கு லாபம் ஈட்டியுள்ளது.

     கடந்த 4 வருடங்களில் வங்கியின் வளர்ச்சியை பாராட்டிய அமைச்சர், பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறினார். சுமார் 17 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்த வங்கியின் 1,400 ஊழியர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களில் இந்த வங்கியின் வர்த்தகம் ரூ.3,000 கோடி அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறினார்.

     கடந்த 1920 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, அதே ஆண்டு மார்ச் மாதம் வங்கி நடவடிக்கையை கங்ரா மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கியது. தரம்சாலாவில் தலைமையகம் அமைந்துள்ள இந்த வங்கியுடன் சேர்த்து தற்போது மொத்தம் 26 கிளைகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1850910

***************


(Release ID: 1851018) Visitor Counter : 158