சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
திறன் மேம்பாட்டு பயிற்சிகளில், தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழக நிறுவனம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
11 AUG 2022 3:26PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழக நிறுவனத்தின் பொதுமேலாளர், முதன்மை செயல் இயக்குநர் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ தலைமை அதிகாரிக்கும் இடையே, 08.08.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழக நிறுவனம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கிடையே முறையான, அடிப்படை தொடர்புகளை அளிக்கிறது. மேலும், பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் நோக்கங்களை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழக நிறுவனம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கிடையே முறையான ஒத்துழைப்பிற்கான அடிப்படையை உருவாக்குவது மற்றும் உலகின் திறன் மேம்பாட்டு தலைநகரமாக இந்தியாவை மாற்றுவது ஆகும்.
தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழக நிறுவனமும், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும், அதனதன் துறைகளில் முன்னணி தேசிய நிறுவனங்களாக இருக்கின்றன. தேசிய நோக்கங்களை அடைவதற்காக, இரண்டும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற விரும்புகின்றன.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850878
***************
(Release ID: 1850920)
Visitor Counter : 196