மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
'மீன் & கடல் உணவு 75 சுவையான, நல்ல கடல் உணவு வகைகள்' தொகுப்பை திரு.பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார்
Posted On:
10 AUG 2022 4:47PM by PIB Chennai
மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா, 'மீன் மற்றும் கடல் உணவு - 75 சுவையான கடல் உணவு வகைகள்' என்ற தலைப்பிலான நூலை இன்று வெளியிட்டார். மீன் மற்றும் கடல் உணவுகளின் உள்நாட்டு விற்பனையை அதிகரிக்கவும், உள்ளூர் மீன் வகைகளை பிரபலப்படுத்தும் விதமாகவும், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழுள்ள, மீன்வளத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய மீன்மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் மற்றும் டாக்டர். சஞ்சய் குமார் பல்யான், செயலாளர் திரு.ஜதீந்திர நாத் ஸ்வைன் ஆகியோர் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், உள்நாட்டு மீன்வளத்துறையின் இணைச்செயலாளர் திரு.சாஹர் மொஹ்ரா, மீன்வளத்துறையின் இணைச்செயலாளர் திரு.ஜே.பாலாஜி, பிறதுறைகளின் அதிகாரிகள், பிரதமரின் மத்திய மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புகழ் பெற்ற சமையல் கலைஞர் குணால் கபூர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுதந்திரதின அமிர்த பெருவிழாவின் ஒருபகுதியாக, இந்திய சுதந்திரத்தின் புகழ்மிக்க 75 ஆண்டுகளைக் குறிக்கும் விதமாக இந்த நூல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம், உள்நாட்டின் நீர்நிலைகளில் இருக்கும் மீன் வகைகளின் பன்முகத்தன்மை மற்றும் நாட்டின் பாரம்பரியமிக்க மீன் உணவு சமையலின் சிறப்பம்சங்களை கொண்டது. மேலும், நாட்டிலுள்ள சமையல் மற்றும் உணவு முறைகளை குறிக்கும் விதமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850522
***************
(Release ID: 1850586)
Visitor Counter : 155