இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
44-வது செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் 9-வது சுற்றில் இந்தியா ஏ, பிரேசிலை தோற்கடிக்க சசிகிரண், எரிகெய்சி ஆட்டம் உதவியது
Posted On:
08 AUG 2022 2:26PM by PIB Chennai
தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஞாயிறன்று நடைபெற்ற ஓபன் பிரிவில் பிரேசிலுக்கு எதிராக 3-1 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா ஏ அணி வெற்றி பெற கிருஷ்ணன் சசிகிரண், அர்ஜூன் எரிகெய்சியின் ஆட்டம் உதவி புரிந்தது.
முதல் ஆட்டத்தில் சசிகிரண், பிரேசில் வீரர் ஆன்ட்ரே டைமண்ட்டை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் எரிகெய்சி பிரேசில் வீரர் சேவாக் கிரிக்கோர் மெக்கிடேரியனை வென்றார். மற்ற ஆட்டங்களில் பென்டாலா ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி ஆகியோர் டிரா செய்தனர்.
இந்தியா சி அணி பராகுவே அணியை 3-1 என்ற ஆட்ட கணக்கில் வென்றது. இந்திய அணி- அஜர்பைசான் இடையேயான ஆட்டம் 2-2 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
மகளிர் பிரிவில் இந்தியா பி அணி, சுவிட்சர்லாந்தையும், இந்தியா சி அணி எஸ்டேனியாவையும் வென்றன. இந்தியா ஏ அணி, போலந்து அணியிடம் தோல்வி அடைந்தது. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், தற்போது ஜார்ஜியாவும் அதனுடன் இணைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849771
***************
(Release ID: 1849793)
Visitor Counter : 248