இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 9வது நாளில் இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை வென்றது.
மல்யுத்தத்தில் வினேஷ் போகட், ரவி தஹியா மற்றும் நவீன், பாரா டேபிள் டென்னிஸில் பவினா படேல் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
Posted On:
07 AUG 2022 1:45PM by PIB Chennai
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 9வது நாளில் இந்தியா நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஏழு வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை வென்றது. மல்யுத்தத்தில் வினேஷ் போகட், ரவி தஹியா,நவீன் ஆகியோரும், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேலும் தங்கப் பதக்கங்களை வென்றனர். தடகளம் மற்றும் ஆடவர் புல்வெளி பந்து உருட்டல் அணி பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி மற்றும் அவினாஷ் சாப்லே ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். மல்யுத்தத்தில் பூஜா கெலாட், பூஜா சிஹாக் மற்றும் தீபக் நெஹ்ரா, குத்துச்சண்டையில் ஜெய்ஸ்மின் லம்போரியா, ரோஹித் டோகாஸ் மற்றும் முகமது ஹுசாமுதீன், பாரா டேபிள் டென்னிஸில் சோனால்பென் மனுபாய் படேல் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 40ஐ எட்டியுள்ளது.
குடியரசு தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஏராளமானோர் பதக்கம் வென்ற வீரர்களின் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849353
•••••••••••••
(Release ID: 1849405)
Visitor Counter : 197