இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
காமன்வெல்த் விளையாட்டு 2022-ன் 6-ம் நாளில் இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது
प्रविष्टि तिथि:
04 AUG 2022 11:53AM by PIB Chennai
காமன்வெல்த் விளையாட்டு 2022-ன் 6-ம் நாளில் இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. லவ்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வென்ற பிறகு, ஜூடோ வீராங்கனை துலிக்கா மான், 78 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும், ஆடவர் பளு தூக்குதல் 109 கிலோ எடை பிரிவில் குர்தீப் சிங் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். தடகளப் பிரிவின் உயரம் தாண்டுதல் போட்டியில் சவ்ரவ் கோஷல் மற்றும் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் தடகளப் பிரிவில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தேஜஸ்வின் சங்கருக்கு வாழ்த்துத் தெரிவித்து குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டின் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியரான தேஜஸ்வின் சங்கர், தமது சிறப்பான திறமையை வெளிப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு பெருமிதம் தேடித்தந்துள்ள அவர், வருங்காலங்களிலும் இது போன்ற வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
துலிக்காவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள குடியரசுத்தலைவர், காமன்வெல்த் ஜூடோ போட்டியில் அபாரத் திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கம் வென்ற துலிக்கா மானுக்கு தமது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.
குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், பளு தூக்குதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற குர்தீப் சிங், சவ்ரவ் கோஷல் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காமன்வெல்த் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது பதக்கத்தை பெற்றுத் தந்த தேஜஸ்வின் சங்கரை, வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் வரலாறு படைத்துள்ள அவரது முயற்சிகளால் பெருமிதம் அடைவதுடன், வருங்கால போட்டிகளிலும் அவர் தொடர்ந்து வெற்றியடை வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே போன்று குர்தீப் சிங், துலிக்கா மான், சவ்ரவ் கோஷல் ஆகியோருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும் தேஜஸ்வனி சங்கர், குர்தீப், சவ்ரவ் கோஷல் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1848225
------
(रिलीज़ आईडी: 1848283)
आगंतुक पटल : 186