இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
காமன்வெல்த் 2022-ல் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி வென்றுள்ளது
Posted On:
03 AUG 2022 11:20AM by PIB Chennai
முக்கிய அம்சங்கள்:
குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆகியோர், வீரர்களுடைய அசாதாரணமான செயலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக்சிங் தாகூர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இது சிறப்பான ஆட்டம் என்று தெரிவித்துள்ளார்
பர்மிங்ஹாம் காமன்வெல்த் 2022 போட்டியின் 5-வது நாளில், இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது. மகளிருக்கான பிரிவில், லான்பவுல்ஸ் அணி, வரலாற்று சிறப்பு வாய்ந்த தங்கத்தை வென்றுள்ளது. ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் அணி, சிங்கப்பூரை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. பளு தூக்கும் போட்டியில், ஆடவருக்கான 96 கிலோ எடைப்பிரிவில், விகாஸ் தாக்கூர் வெள்ளிப் பதக்கமும். பேட்மின்டன் இறுதிப்போட்டியின், கலப்பு பிரிவில், மலோசியாவிடம் தோற்ற இந்திய அணி, வெள்ளிப் பதக்கமும் வென்றது. 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு, குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, பிரதமர் திரு.நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காமன்வெல்த் 2022-ல் தங்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கு, குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதவில், “காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிசில் தங்கம் வென்றுள்ள, சத்யன் குணசேகரன், சரத் கமல், ஹமீத் தேசாய் மற்றும் சனில் ஷெட்டி ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்கள் அசாதாரண திறமையுடன், உறுதியை வெளிப்படுத்தினர். அவர்கள் இந்தியாவின் இதயத்தை வென்றுள்ளனர். அவர்களின் இந்த சாதனை இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்”.
பாட்மின்டன் அணியை வாழ்த்தி குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பாட்மின்டன் கலப்புப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்திய பேட்மின்டன் வீரர்களுக்கு வாழ்த்துகள். அணியினர் வெளிப்படுத்திய திறமை, குழு ஒத்துழைப்பு மற்றும் போராடும் குணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அனைத்து வீரர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காமன் வெல்த் 2022-ல் தங்கம் வென்ற டேபிள் டென்னிஸ் அணியினருக்கும், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய பேட்மின்டன் அணிக்கும், வெள்ளிப் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீரர் விகாஸ் தாக்கூர் ஆகியோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டேபிள் டென்னிசில் தங்கப் பதக்கம் வென்ற சத்யன் குணசேகரன், சரத் கமல், ஹமீத் தேசாய் மற்றும் சனில் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டரில், டேபிள் டென்னிசிக்கு இன்று ஒரு சிறந்த செய்தி. காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற, டேபிள் டென்னிஸ் குழுவினருக்கு வாழ்த்துகள். இந்த அணி, திறமை, உறுதியை வெளிப்படுத்துவதில் மைல்கல்லை எட்டியுள்ளனர். அவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துகள்”.
பிரதமர் ட்விட்டரில், “காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, ஸ்ரீ கடாம்பி, சாத்விக் சாய்ராஜ், புஸ் ரெட்டி, லக்க்ஷயா சென், ஷெட்டிசிராக் 04, த்ரீஷா ஜாலி, ஆகர்ஷி கஷ்யப், பி9 அஸ்வினி, பி.வி.சிந்து 1 ஆகியோர் அடங்கிய இந்திய பேட்மின்டன் அணியினருக்கு எனது வாழ்த்துகள். அவர்களின் சாதனைக்காக பெருமைப்படுகிறேன்”.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847721
***************
(Release ID: 1847858)
Visitor Counter : 169