ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ரயில்வே ஜூலை 2022-ல் 122.14 மெட்ரிக்டன் சரக்குகளை ஏற்றி முன்னெப்போதும் இல்லாத மாதாந்தர சிறப்பு சாதனை படைத்துள்ளது

Posted On: 03 AUG 2022 10:42AM by PIB Chennai

இந்திய ரயில்வே ஜூலை 2022-ல் 122.14 மெட்ரிக்டன் சரக்குகளை ஏற்றி முன்னெப்போதும் இல்லாத மாதாந்தர சிறப்பு சாதனை படைத்துள்ளது. 2021 ஜூலையில் ஏற்றப்பட்ட சரக்குகளை விட 9.3 மெட்ரிக்டன் கூடுதலாக ஏற்றப்பட்டு, 8.25 சதவீத உயர்வை கண்டுள்ளது. இதையடுத்து தொடர்ச்சியாக 23 மாதங்களிலும் சரக்குகள் ஏற்றுவதில் சிறந்து விளங்குகிறது.

  நிலக்கரி ஏற்றும் அளவு 11.54 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. மோட்டார் வாகனங்கள் ஏற்றுவதில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றொரு முக்கிய அம்சமாகும். நிதி ஆண்டு 2022-23-ல் ஜூலை வரை 1698 அடுக்குகளில் மோட்டார் வாகனங்கள் இயக்கப்பட்டன. இது சென்ற ஆண்டு இதே காலத்தில் ஏற்றப்பட்ட 994 அடுக்குகள் என்பதில் இருந்து 71 சதவீதம் அதிகமாகும்.

 2022 ஏப்ரல் 1-ல் இருந்து ஜூலை 31 வரை ஒட்டுமொத்த சரக்குகள் ஏற்றப்பட்ட அளவு 501.53 மெட்ரிக் டன் ஆகும். இது 2021-22-ல் எட்டப்பட்ட 452.13 மெட்ரிக் டன் என்பதை விட 49.40 மெட்ரிக் டன் அதிகமாகும்.

 மேலும் விவரங்களுகளுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847696

***************


(Release ID: 1847733) Visitor Counter : 166