சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் மூத்த நிர்வாக மருத்துவ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத் தொடக்க விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்

Posted On: 01 AUG 2022 1:22PM by PIB Chennai

ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சி மிகு நாட்டை கட்டமைக்க நேர்மறையான சிந்தனை மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய நல்ல மனநிலை அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

            புதுதில்லியில் மத்திய அரசின் சுகாதாரத் திட்ட மூத்த நிர்வாக மருத்துவ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.  அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் கர்மயோகியாக விளங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாம் அனைவரும் நேர்மறையான சிந்தனையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் டாக்டர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

            இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பவார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

            நாடு முழுவதும் 75 நகரங்களில் 460 நலவாழ்வு மையங்கள் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கென மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் 41.2 லட்சம் பேர் பயனடைகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1846918  

***************


(Release ID: 1846950) Visitor Counter : 361