குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் நிலை குறித்து குடியரசு துணைத் தலைவர் ஆய்வு
Posted On:
28 JUL 2022 3:52PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேசத்தில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் நிலை குறித்து குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு இன்று ஆய்வு செய்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்த அவர், திட்டப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் இன்று குடியரசு துணைத் தலைவரை சந்தித்து விசாகப்பட்டினம்-சென்னை கடலோர தொழில்துறை வழித்தடம் அமைக்கும் பணிகள் குறித்து விளக்கினார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி, திரு.வெங்கையா நாயுடுவை சந்தித்து காக்கிநாடாவில் கட்டப்பட்டு வரும் பெட்ரோ கெமிக்கல் கட்டிடப் பணிகளின் நிலை குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு.கிஷன் ரெட்டியிடம் திரு.வெங்கையா நாயுடு ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களின் நிலை மற்றும் பாரம்பரிய நகரங்களின் மேம்பாடு குறித்து கேட்டறிந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845836
***************
(Release ID: 1845874)
Visitor Counter : 152