குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலை பணிகளின் நிலை குறித்து குடியரசு துணைத் தலைவர் ஆய்வு செய்தார்
Posted On:
27 JUL 2022 5:55PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு தொழிற்சாலைகள் மற்றும் பயிற்சி நிலையங்களின் பணிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் இன்று கேட்டறிந்தார். இத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், குடியரசு துணைத் தலைவரை சந்தித்து அனந்தபூர் மாவட்டம் பாலசமுத்திரம்மையில் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைந்த வளாக கட்டுமானப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், திரு.வெங்கையா நாயுடுவை சந்தித்து ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் தேசிய சுங்கம், கலால் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பயிற்சி நிலையம் குறித்து விளக்கினார். 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த பயிற்சி நிலையம் இந்தியாவில் இரண்டாவது பயிற்சி நிலையமாகவும், தென்னிந்தியாவின் முதல் பயிற்சி நிலையமாகவும் இது இருக்கும்.
பின்னர் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.பிரல்ஹத் ஜோஷி குடியரசு துணைத் தலைவரை சந்தித்து நெல்லூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் அலுமினிய தயாரிப்பு தொழிற்சாலை பணிகள் குறித்து விளக்கினார்.
குடியரசு துணைத் தலைவர் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் பின்னர் பேசினார். அப்போது நெல்லூர் மாவட்டம் துப்பிலிபள்ளம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் கட்டுமானப் பணிகள் நிலைக் குறித்து குடியரசுத் துணைத் தலைவரிடம் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845487
***************
(Release ID: 1845595)
Visitor Counter : 181