மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அனுசிலன் சமிதி பற்றிய தகவல்களை தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

Posted On: 24 JUL 2022 6:28PM by PIB Chennai

காலனி ஆட்சியை அகற்றி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் நோக்கத்துடன் 20ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் செயல்பட்டு வந்த ஒரு முக்கிய ரகசிய புரட்சிகர சங்கமாக அனுசிலன் சமிதி திகழ்ந்ததாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.  தைரியம், தியாகம் மற்றும் உத்வேகத்தின் அடையாளமாகத் திகழும்  இந்த மாளிகையில் அமைச்சர் மூவண்ணக்கொடியை  ஏற்றினார்.

சதீஷ் சந்திர பிரமத மித்ரா, அரவிந்தோ கோஷ், சரளா தேவி ஆகியோரால் நிறுவப்பட்ட அனுசிலன் சமிதி, தேசியத்தை வலியுறுத்தியதுடன்,  சுதேசிக்கு முக்கியத்துவம் அளித்த எழுத்துக்கள், வெளியீடுகள், நாட்டின் மனசாட்சியை வடிவமைத்த புனித பூமியான வங்கத்தில் இருந்த பல புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகும் என்று திரு பிரதான் கூறினார்.

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், சுரேந்திரநாத் தாகூர், ஜதீந்திரநாத் பானர்ஜி, பாகா ஜதின் போன்ற மேதைகள் அனுசிலன் சமிதியுடன் தொடர்புடையவர்கள். ஹெட்கேவார் சமிதியின் பழைய மாணவரும் ஆவார். குறிப்பாக அமிர்தப் பெருவிழாவின் போது இந்தப் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது பெரும் வாய்ப்பு என்று  அவர் மேலும் கூறினார்.

குறிப்பாக வரவிருக்கும் காலங்களில் அனுசிலன் சமிதி பற்றிய போதுமான தகவல்களை சேர்க்குமாறு என்சிஇஆர்டி மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்களை அமைச்சர் வலியுறுத்தினார்.

***************


(Release ID: 1844439) Visitor Counter : 188