சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய விருதுகள்
Posted On:
23 JUL 2022 3:33PM by PIB Chennai
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கான தேசிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, 14.07.2022 அன்று, மத்திய அரசின் விருதுகளுக்கான இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த இணையப் பக்கத்தில் 15 ஜுலை 2022 முதல் 28ஆகஸ்ட் 2022 வரை விண்ணப்பிக்கலாம். இந்த விளம்பரத்தை, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின், www.disabilityaffairs.gov.in என்ற வலைப்பக்கத்திலும் (website) பார்க்கலாம். மேற்குறிப்பிட்ட விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை அனுப்புவது குறித்து விரிவாக விளம்பரப்படுத்தக்கோரி, மாநில/யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்பினருக்கு 19.7.2022 அன்று கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
***
(Release ID: 1844206)
Visitor Counter : 209