மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இந்தியா-இங்கிலாந்துஇடையே வர்த்தக பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன; ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நிறைவடையும்: வர்த்தகத்துறை செயலாளர்
प्रविष्टि तिथि:
21 JUL 2022 6:51PM by PIB Chennai
இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தக பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன; இங்கிலாந்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகத்துறை செயலாளர் திரு பி பி ஆர் சுப்பிரமணியம், இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நிறைவடையும் என்று தெரிவித்தார்.
இரண்டு நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என்று அவர் கூறினார்.
முன்னதாக, கடல்சார் கல்வி உள்ளிட்ட கல்வி தகுதிகளை பரஸ்பரம் இருநாடுகளும் அங்கீகரித்தல் மற்றும் சுகாதாரப் பணி கட்டமைப்பு ஆகியவற்றில் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, மேல்நிலை பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக்கழக படிப்பிற்கு முந்தைய கல்வி சான்றிதழ்கள் இங்கிலாந்தில் உயர்கல்வி படிப்பதற்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843544
***************
(रिलीज़ आईडी: 1843568)
आगंतुक पटल : 319