சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீது தடை

Posted On: 21 JUL 2022 2:42PM by PIB Chennai

காது சுத்தப்படுத்தும் பஞ்சு பொருத்திய பிளாஸ்டிக் குச்சிகள், பலூன்களுக்கான  பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் பொருத்தும் பிளாஸ்டிக் குச்சிகள், ஐஸ்கிரீம் பொருந்திய பிளாஸ்டிக் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல் ஆகியவையும் பிளாஸ்டிக் தட்டுகள், கிண்ணங்கள்,  குவளைகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சுகுழல், இனிப்பு பெட்டிகளில் சுற்றப்படும் அல்லது பேக் செய்யப்படும் பிளாஸ்டிக், அழைப்பிதழ்கள், சிகரெட் பெட்டிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும், 100 மைக்ரானுக்கு குறைவாக உள்ள  பிளாஸ்டிக் அல்லது  பிவிசி பதாகைகள் ஆகியவற்றை தயாரிப்பது, இறக்குமதி செய்வது, இருப்பு வைப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தடைவிதிக்கும் பிளாஸ்டிக் கழிவு நிர்வாக சீர்திருத்த விதிகள் 2021-ஐ, ஆகஸ்ட் 12 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்தது.

75 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கும் தடைவிதித்தும் 2021 செப்டம்பர் 30 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் 120 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2022 டிசம்பர் 31 முதல் தடை விதிக்கப்படவுள்ளது.  பிளாஸ்டிக் பைகள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை தடை செய்வதற்கான அறிவிப்புகளை ஏற்கனவே 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வெளியிட்டுள்ளன.

 மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலைத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்தார்.

 மேலும் விவரங்களுக்கு  இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843398

***************


(Release ID: 1843490) Visitor Counter : 229