பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கொவிட்-19 தொற்று காலத்தில் கூட மத்திய அரசின் பணியாளர் தேர்வு தொடர்ந்து நடைபெற்றது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
21 JUL 2022 1:07PM by PIB Chennai
கொவிட்-19 தொற்று காலத்தில் கூட மத்திய அரசின் பணியாளர் தேர்வு தொடர்ந்து நடைபெற்றது என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை (தனிபொறுப்பு) ஊழியர்நலன், பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், புவி அறிவியல், அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசிய அவர், மத்திய அரசின் பணியாளர் சேர்ப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார். கடந்த 2020-21, 2021-22 ஆகிய வருடங்களில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் 1,59,615 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். கொவிட்-19 தொடர்பான அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
நடப்பாண்டிற்கான பணியாளர் தேர்வில் பங்கேற்பவர்களின் வயது வரம்பை 01.01.2022 அடிப்படையில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843357
**************
(रिलीज़ आईडी: 1843477)
आगंतुक पटल : 233