பாதுகாப்பு அமைச்சகம்
ஸ்வாவ்லம்பான்' (தற்சார்பு) கடற்படையின் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம்
Posted On:
20 JUL 2022 1:00PM by PIB Chennai
ஸ்வாவ்லம்பான்' (தற்சார்பு) கடற்படை கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல்(என்.ஐ.ஓ.ஓ) நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் 18 - 19 ஜூலை 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இரண்டுநாள் கருத்தரங்கில், கடற்படை வீரர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர், கொள்கை வகுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் மற்றும் அரசு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தலைமையகத்தின் பணியாளர்கள் மற்றும் கடற்படையின் மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் இணையவழியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலையில் முதல் அமர்வு கடற்படை துணைத்தலைவர், மூத்த அதிகாரி வினீத் மாக்கர்ட்டியின் வரவேற்புரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் டாக்டர். அஜய் குமார் உரை நிகழ்த்தினார். கடற்படையின் துணைத்தலைவர் எஸ்.என். கோர்மேட் சிறப்புரையாற்றினார். இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர், தொழில்துறைக்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பேசினார். தொடக்க அமர்வில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்திய கடற்படை தொழில் கூட்டமைப்பின் கையேடு வெளியிடப்பட்டது.
முதல்நாள் அமர்வில், குறிப்பிட்ட நான்கு கருப்பொருள்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. புதுமை குறித்த அமர்வில், இந்தியக் கடற்படை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தொழில்துறை, கல்வித்துறை, கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. கடற்படை கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவனத்தின் இதுவரையிலான சாதனைகள் மற்றும் முன்னேற்றத்துக்கான வழி குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடற்படை ஆயுதங்களை அடிப்படையாக கொண்ட இரண்டாவது அமர்வு, இத்துறையில் சுயசார்பை அடைவதில், இந்திய தொழில்துறையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக வழிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. விமானப் போக்குவரத்தை மையமாகக் கொண்ட மூன்றாவது அமர்வில், விமானப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதி அமர்வு, பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், சவால்கள் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842970
***************
(Release ID: 1843070)
Visitor Counter : 221