உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

பிஎம்கேஎஸ்ஒய் கீழ், விவசாய உற்பத்தியின் பாதுகாப்பு மற்றும் செயலாக்கம்

Posted On: 19 JUL 2022 1:12PM by PIB Chennai

2021-22-ம் ஆண்டில், பிரதமரின் நவீன வேளாண் கட்டமைப்பு திட்டத்தின் (பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா) பல்வேறு துணைத்திட்டங்களின்கீழ், மொத்தம் 17 திட்டங்களுக்கு, உணவு பதப்படுத்துவதற்கான ஒப்புதலை, உணவுபதன தொழில்கள் அமைச்சகம் வழங்கியுள்ளது. இது 3.6428 லட்சம் மெட்ரிக் டன் செயலாக்கத் திறன் மற்றும் ஆண்டுக்கு 2.2149 லட்சம் மெட்ரிக் டன் பாதுகாப்புத் திறனுடையது.

17 திட்டங்களின் விவரம் பின்வருமாறு:

வ.எண்

                  திட்டம்

ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை

1

வேளாண் செயலாக்க திட்டங்கள்

         7

2

உணவு பதப்படுத்துதல்/ பாதுகாப்புத் திறன் உருவாக்கம்/ விரிவாக்கம்

         3

3

ஒருங்கிணைந்த சங்கிலித் தொடர் இணைப்பு, மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு

         5

4

மாபெரும் உணவுப்பூங்காக்கள்

         2

 

                          மொத்தம்

        17

 

(இ) 2021-22-ல் அனுமதி அளிக்கப்பட்ட 17 திட்டங்களில், 11,137 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

இந்த தகவலை உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் திரு.பிரஹலாத் சிங் படேல், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

                                      **********

(Release ID: 1842636)



(Release ID: 1842688) Visitor Counter : 151