பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்
21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை மிக முக்கியமானது
“புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது”
“உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் முதலாவது விமானந்தாங்கி கப்பல் வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வருவதற்காக காத்திருக்கவும்”
“தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் பரவியுள்ளது மற்றும் போர்முறைகளிலும் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது”
“சர்வதேச அளவில் இந்தியா பெருமை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகிறது”
“உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இந்தியாவின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும்”
“தற்சார்பு இந்தியாவுக்கான 'முழு அரசாங்க' அணுகுமுறையைப் போலவே, 'தேசத்தின் முழு' அணுகுமுறையும் தேசத்தின் பாதுகாப்பி

Posted On: 18 JUL 2022 7:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் நடைபெற்ற  கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் இன்று உரையாற்றினார்.

இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில்ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.  அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை  மிக முக்கியமானது என்று கூறினார்.

புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில்,  போர்முறைகளிலும் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். சர்வதேச அளவில் இந்தியா அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், தவறான தகவல்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இந்தியாவின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்சார்பு இந்தியாவுக்கான முழு அரசாங்க அணுகுமுறையைப் போலவே, தேசத்தின் முழு அணுகுமுறையும் தேசத்தின் பாதுகாப்பிற்கான காலத்தின் தேவையாகும் என்றார்.

இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே 75 புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், விரைவில் அது நிறைவேற்றப்படும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வாங்குபவர் என்ற நிலையிலிருந்து, கட்டமைப்பவர் என்ற நிலைக்கு இந்திய கடற்படை மாற்றம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப் பெருவிழாவை நாடு கொண்டாடிவரும் வேளையில், சுதந்திரம் என்ற இலக்கணத்திற்கு தற்சார்பு என்ற புதிய பரிமாணம் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். உணவு தானியங்களில் நாம் தன்னிறைவை மட்டும் அடையாமல், மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக விளங்குவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல்வேறு மக்களின் உயிரை பாதுகாத்ததாகத் தெரிவித்தார். மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும், நமது விண்வெளி மையம் செலுத்துவதாக அவர் கூறினார்.

பல்வேறு துறைகளில் தற்சார்பை அடைந்தது என்ற நிலையோடு, மற்ற நாடுகளின் தேவைகளையும் இந்தியா நிறைவேற்றி வருவதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் எஸ் என் கோர்மேட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இரண்டு நாட்களுக்கு இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842449

***************(Release ID: 1842471) Visitor Counter : 221