சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
'200 கோடி' கோவிட்-19 தடுப்பூசிகள் என்னும் முக்கிய சாதனையை இந்தியா படைத்துள்ளது
கோவிட் தடுப்பூசி இயக்கத்தின் 200 கோடி மைல்கல்லை கடந்ததற்காக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
"இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் அளவிலும் வேகத்திலும் இணையற்றது"
இந்த அசாதாரண சாதனை வரலாற்றில் பொறிக்கப்படும்: டாக்டர் மன்சுக் மாண்டவியா
Posted On:
17 JUL 2022 1:50PM by PIB Chennai
ஒரு வரலாற்று சாதனையாக, இந்தியாவின் ஒட்டுமொத்த கோவிட்19 தடுப்பூசி இயக்கம் இன்று 200 கோடி என்னும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. இன்று மதியம் 1 மணி வரையிலான தற்காலிக நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 2,00,00,15,631 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,63,26,111 அமர்வுகள் மூலம் இது எட்டப்பட்டுள்ளது.
இந்த சாதனையை நிகழ்த்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை "அளவிலும் வேகத்திலும் இணையற்றது" என்று கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும் 18 மாதங்களில் இந்த சாதனையை நாடு படைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த அசாதாரண சாதனை வரலாற்றில் பொறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், மனிதகுலத்தின் சேவையில் புதிய சாதனையை ஏற்படுத்துவதில் கடின உழைப்பு, தொலைநோக்கு மற்றும் கண்டுபிடிப்புகளை அளித்த சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நாடு தழுவிய கோவிட்19 தடுப்பூசி இயக்கம் பிரதமரால் 2021 ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்டது. அவரது செயல்திறன் மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், “இந்தியாவில் தயாரிப்போம்” , “ உலகத்துக்காக தயாரிப்போம்” ஆகியவற்றின் கீழ் கோவிட்19 தடுப்பூசிகளின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்திக்கு இந்தியா ஆதரவு அளித்தது. உலகத்திற்கான உத்தி, புவியியல் அளவை மதிப்பிடுவதற்கும், தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகளைக் கண்காணிப்பதற்கும், உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கும், குடிமக்கள் தங்கள் தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவதற்கும், முன்னுரிமை அளிக்கப்பட்ட தடுப்பூசி நிர்வாகம் அடிப்படையிலான ஒற்றைக் குறிப்புப் புள்ளியை பராமரிக்கவும் கோவின் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுடன், அறிவியல் சான்றுகள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்துவதைத் தொடங்கியது.
இந்த நாடு தழுவிய பயிற்சியை மேற்கொள்வதற்கான திறனை வளர்ப்பதை உறுதி செய்வதில் பல முறையான தலையீடுகளும் மேற்கொள்ளப்பட்டன. கோவிட் 19 தடுப்பூசிகளை சேமிப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் தற்போதுள்ள விநியோகச் சங்கிலியானது, தடுப்பூசி விநியோகம் மற்றும் தடுப்பூசிகள் மற்றும் மருந்தை உட்செலுத்தும் ஊசிகள் கிடைக்கும் தன்மை , அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவது ஆகியவை உறுதிசெய்யப்பட்டது. தடுப்பூசி இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில், திறம்பட கண்காணிப்பது எல்லா நேரங்களிலும் உறுதி செய்யப்பட்டது.
வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துதல், பணியிடங்கள், பள்ளிகளில் ஊசி செலுத்துதல், அடையாள ஆவணங்கள் இல்லாத நபர்களுக்கு தடுப்பூசி, வீட்டிற்கு அருகில் உள்ள நடமாடும் தடுப்பூசி குழுக்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம் இந்தியாவின் இலவச நாடு தழுவிய கோவிட்19 தடுப்பூசி பயிற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் தடுப்பூசி மையங்கள் மூலம் 71 சதவீதமும், 51% க்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதன் மூலம், இந்தியாவின் தேசிய கோவிட்19 தடுப்பூசி திட்டமும் புவியியல் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்துள்ளது.
நாடு முழுவதும் கோவிட் பாதிப்பு குறைந்துவிட்ட போதிலும், தகுதியுள்ள அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் நடந்து வருகின்றன. 16 2021ஜனவரி 16 அன்று தடுப்பூசி இயக்கம் தொடங்கியதில் இருந்து 100 கோடியை எட்டுவதற்கு கிட்டத்தட்ட 9 மாதங்களும், 200 கோடி தடுப்பூசியை எட்ட இன்னும் 9 மாதங்களும் எடுத்தது, அதிகபட்ச ஒற்றை நாள் தடுப்பூசி சாதனையுடன் இது நிகழ்த்தப்பட்டது. 2021 செப்டம்பர்17 அன்று 2.5 கோடி டோஸ் செலுத்தப்பட்டது.
2022 ஜூலை 15 அன்று, அரசு கோவிட் தடுப்பூசி மையங்களில் தகுதியுள்ள அனைத்து வயது வந்த மக்களுக்கும் இலவச முன்னெச்சரிக்கை டோஸ் ( பூஸ்டர்) வழங்குவதற்காக 75 நாட்கள் நீடிக்கும் 'கோவிட் தடுப்பூசி அமிர்தப் பெருவிழாவை' மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு இயக்கம், கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர்அளவை அதிகரிப்பதற்காக 'தீவிர பயன்முறையில்' செயல்படுத்தப்படுகிறது.
கோவிட் தடுப்பூசி குறித்த சரியான தகவல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தகவல் தொடர்பு உத்தியையும் இந்தியா வகுத்துள்ளது. இது தடுப்பூசி தயக்கத்தை நிவர்த்தி செய்ய உதவியதுடன், தடுப்பூசி ஆர்வத்தையும் கோவிட் பொருத்தமான நடத்தை நெறிமுறைகளையும் மக்களிடையே ஊக்குவித்தது.
நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசியின் வேகத்தை மேலும் விரைவுபடுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
***************
(Release ID: 1842196)
Visitor Counter : 456