அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சார்ஸ்-கொவ்-2மற்றும் அதன் உருமாற்றங்களின் தொற்றினை கட்டுப்படுத்தவும், நோயின் கடுமையைக்குறைக்கவும் கோவேக்சின் உதவும்:ஆய்வு

Posted On: 15 JUL 2022 4:28PM by PIB Chennai

தடுப்பூசி செலுத்தி குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு பின், சார்ஸ்-கொவ்-2 மற்றும் அதன் உருமாறிய வைரசை கோவேக்சின் கட்டுப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், நோயின் கடுமையைக் குறைக்கவும் இது உதவும்.

தடுப்பூசி திறன் குறித்த பரிசோதனை தரவுகள், கிடைத்துள்ள போதும், சான்று அடிப்படையிலான முக்கிய கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறதா, தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கிறது,  சார்ஸ்-கொவ்-2 உருமாறிகளுக்கு  எதிராக இந்த நோய் எதிர்ப்பு சக்தி பயன்படுகிறதா போன்றவை இவற்றில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841775

 

***************



(Release ID: 1841828) Visitor Counter : 183