தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி இயக்கம்

Posted On: 15 JUL 2022 4:13PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், '75-வது ஆண்டு சுதந்திரதினப் பெருவிழா'வின் ஒரு பகுதியாக கொவிட்-19 இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி இயக்கத்தை இன்று ஷ்ரம் சக்தி பவனில் ஏற்பாடு செய்திருந்தது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ், இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு.சுனில் பர்த்வாலுக்கும் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொவிட்-19 இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின் பேசிய அமைச்சர், தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். தங்களை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் சமுதாயத்தையும், நாட்டையும் கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அதன் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் வரும் 75 நாட்களில், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மூலம் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தகுதியான நபர்கள், இந்தியா முழுவதுமுள்ள அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள, இந்திய அரசு ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளது.  எந்தவொரு இஎஸ்ஐ மருத்துவமனைகளிலும் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். சுதந்திரதின 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கி அடுத்த 75 நாட்களுக்கு நடைபெறுகிறது.

                                   ***************



(Release ID: 1841801) Visitor Counter : 193