ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் அதன் கீழ் உள்ள ‘தேசிய ஊரக மேம்பாட்டு இயக்கத்தின்’ மூலம் ஆள்சேர்ப்பு நடப்பதாக கூறப்படும் மோசடி அறிவிப்பு குறித்து பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்

Posted On: 15 JUL 2022 3:08PM by PIB Chennai

மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் ஆள்சேர்ப்பு நடப்பதாக,  அமைப்பு ஒன்று மோசடித்தனமாக  கூறியிருப்பது குறித்து பொதுமக்களின் கவனத்தை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஈர்க்க விரும்புகிறது.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்,  என்டிசிசி – II, 7வது தளம், ஜெய்சிங் சாலை,  புதுதில்லி – 110 001 என்ற முகவரியில் தேசிய ஊரக மேம்பாட்டு இயக்கம்  தனது அலுவலகத்தைக் கொண்டுள்ளது.

மாறாக இந்த மோசடி அமைப்பு கூறியிருப்பது போல் 12, லோதிசாலை, 110 003 மற்றும் தொடர்பு எண் 83759 99665  என்பது மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இல்லை. 

தேசிய ஊரக மேம்பாட்டு இயக்கம், ஆள் சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தனது ஆள் சேர்ப்பு நடைமுறைகளுக்கோ அல்லது பிறவற்றுக்கோ கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை, அல்லது விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை கோருவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

----


(Release ID: 1841785) Visitor Counter : 273