குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதி பொருட்களுக்காக காதி உயர் சிறப்பு மையம் உருவாக்கியுள்ள அறிவுசார் இணையப்பக்கத்தை கதர்கிராம தொழில்வாரியம் தொடங்கியுள்ளது
Posted On:
15 JUL 2022 12:08PM by PIB Chennai
கதர் நிறுவனங்களுக்கு வடிவமைப்பு குறித்து வழி காட்டுவதற்காக, காதி உயர் சிறப்பு மையத்தால் கதர் பொருட்களுக்கான அறிவுசார் இணையப்பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையப்பக்கத்தை கதர் கிராம தொழில்வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி திருமதி ப்ரீதா வர்மா 14, ஜூலை 2022 அன்று தொடங்கிவைத்தார். காதி நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில், குறு சிறு நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கதர்கிராம தொழில் வாரியத்தால் நிஃப்ட் (NIFT) நிறுவனத்தில், கதர் பொருட்களுக்கான இந்த உயர் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கதர் உற்பத்தி பொருட்களுக்கு காலத்திற்கு மிகவும் ஏற்ற வடிவமைப்பை உருவாக்குவதற்காக இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
இந்த இணையப்பக்கத்தில் வண்ணத்தட்டு, நெசவு வடிவமைப்புக்கான வழி காட்டுதல், அளவு அட்டவணை, பொத்தான்கள் உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வடிவமைப்புகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைய பக்கத்தை காணவும்: www.coek.in
***************
(Release ID: 1841699)
(Release ID: 1841709)
Visitor Counter : 260