தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்
மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், பிம்ஸ்டெக் நிபுணர்கள் குழு கூட்டத்துக்கு ஏற்பாடு
Posted On:
14 JUL 2022 4:15PM by PIB Chennai
இணைய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் நிபுணர்கள் குழுவின் இரண்டு நாள் கூட்டம், மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் சார்பாக, புதுதில்லியில், 2022 14-15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. 2019 மார்ச்சில், பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக்கின் தேசிய பாதுகாப்பு தலைவர்கள் சந்திப்பின்போது, பிம்ஸ்டெக்கில் உள்ள நாடுகளின் இணையப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க, பிம்ஸ்டெக் நிபுணர் குழு ஒரு செயல் திட்டத்தை உருவாக்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்த கூட்டம் நடைபெற்றது.
தேசிய இணைய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், வங்கதேசம், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளின் இணைய பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் ஆவர்.
பாதுகாப்புத் துறையில் முன்னணி நாடாகவுள்ள இந்தியா, இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கும், இணைய பாதுகாப்புக்கான செயல் திட்டத்தை உருவாக்குவதற்கும் முயற்சிகளை எடுத்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841482
***************
(Release ID: 1841540)