பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

இந்திய பெரு நிறுவன சட்டசேவை பயிற்சி அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்திற்கு இந்திய திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்ட வாரியம் ஏற்பாடு

Posted On: 14 JUL 2022 1:42PM by PIB Chennai

இந்திய திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்ட வாரியம், இந்திய பெருநிறுவன சட்ட சேவையின் 2020 பிரிவைச்சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுக்கான  மூன்று நாள் பயிற்சி திட்டத்திற்கு, 11 முதல் 13 ஜூலை 2022 வரை ஏற்பாடு செய்திருந்தது.  வாரியத்தின் முழுநேர  உறுப்பினர் திரு சுதாகர் சுக்லா, மற்றொரு உறுப்பினரான திருமதி ஜெயந்தி பிரசாத் முன்னிலையில் இந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

 இந்த பயிற்சியின் போது, திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் 2016 குறித்து முழுமையாக விளக்கி கூறப்பட்டதுடன், திவால் சேவைகள் தொழில்முறை மற்றும் கட்டுப்பாட்டாளரின் பங்கு குறித்தும் விவரிக்கப்பட்டது. குழு திவால், எல்லை தாண்டிய திவால் மற்றும் தனிநபர் திவால் போன்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841437

 

***************



(Release ID: 1841535) Visitor Counter : 191