விண்வெளித்துறை

பிரதமர் திரு நரேந்திர மோடி, அண்மையில் இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்த பிறகு, இஸ்ரோவிடம் சுமார் 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன; இவற்றில் சில நிறுவனங்கள் விண்வெளியில் சிதறிக்கிடக்கும் கழிவு மேலாண்மை தொடர்பானவை என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 11 JUL 2022 6:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அண்மையில் இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்த பிறகு, இஸ்ரோவிடம் சுமார் 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன; இவற்றில் சில நிறுவனங்கள் விண்வெளியில் சிதறிக் கிடக்கும் கழிவு மேலாண்மை தொடர்பானவை என மத்திய விண்வெளி, அணுசக்தி மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இன்று பாதுகாப்பான &  நீடித்த இயக்கத்திற்கான இஸ்ரோ அமைப்பை தொடங்கிவைத்துப் பேசிய அவர்,  மற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நானோ செயற்கை கோள், செலுத்து வாகனம், தரைக்கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி சார்ந்தவையாகும் என்றார்.

அகமதாபாத்தில் இன்-ஸ்பேஸ் தலைமையகத்தை  கடந்த மாதம் திறந்து வைத்த பிரதமர், அரசின் விண்வெளி நிறுவனங்களின் வலிமையும், இந்தியாவில் உள்ள தனியார் துறையினரின் ஆர்வமும் ஒன்றிணைந்தால், வானம் கூட, எல்லையாக இருக்கமுடியாது என்று கூறியதை நினைவுகூர்ந்தார்.

தனியார் துறையினரின் ஆர்வத்துடன், புதுமை ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இணைந்து  விண்வெளியில் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதில் விண்வெளி துறையின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840795

 

***************



(Release ID: 1840815) Visitor Counter : 290