விவசாயத்துறை அமைச்சகம்
டிஜிட்டல் வேளாண்மையில் அரசு-தனியார் பங்களிப்பு குறித்த ஆலோசனை
प्रविष्टि तिथि:
11 JUL 2022 5:09PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, உலக பொருளாதார அமைப்பின் இந்திய கிளையுடன் இணைந்து, புதுதில்லியில் இன்று (11. 07. 2022) டிஜிட்டல் வேளாண்மையில் அரசு-தனியார் பங்களிப்பு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் திரு மனோஜ் அஹூஜா இந்த ஆலோசனைக்கு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய திரு அஹூஜா, 2022-23 மத்திய பட்ஜெட்டில், அரசு துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் விவசாயிகளுக்கு டிஜிட்டல் மற்றும் உயர் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவது என அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
உலக பொருளாதார அமைப்பின் இந்திய கிளையின் தலைமை ஆலோசகர் திரு ஜெ சத்தியநாராயணா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் தலைமை அறிவாற்றல் அதிகாரி திரு ராஜீவ் சாவ்லா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
***************
(रिलीज़ आईडी: 1840798)
आगंतुक पटल : 249