சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கங்களை வெற்றிகரமான ஏலத்துக்கு விடும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

प्रविष्टि तिथि: 11 JUL 2022 12:29PM by PIB Chennai

மத்திய நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.பிரஹலாத் ஜோஷி, சுரங்கங்களை வெற்றிகரமான ஏலத்துக்கு விடும் மாநிலங்களுக்கும், லாபம் தரும் நிலக்கரி சுரங்கங்களை கண்டறியும் மாநிலங்களுக்கும் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இது பிற மாநிலங்கள், சுரங்கத் துறையில் சிறப்பாக செயல்பட ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். சுரங்கத் துறையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு, புதுதில்லியில் நாளை நடைபெறவுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தேசிய மாநாட்டில் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

நிலக்கரி சுரங்க அமைச்சகத்தின் 75-வது சுதந்திரதின அமிர்தப் பெருவிழா சிறப்பு வாரக்கொண்டாட்டத்தை திரு.பிரஹலாத் ஜோஷி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, நாளை நடைபெறவுள்ள ஒருநாள் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840698

                                 ***************


(रिलीज़ आईडी: 1840733) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu