சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்பான 6வது தேசிய மாநாட்டை புதுதில்லியில் சுரங்கத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 09 JUL 2022 10:41AM by PIB Chennai

மத்திய சுரங்கத்துறை  அமைச்சகம் வரும்  12 ஆம் தேதி புது தில்லியில் விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஐகானிக் வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் குறித்த 6வது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதுடாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் திரு  அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். சுரங்கம், நிலக்கரித்துறை மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே , சுரங்கத் துறை செயலர் திரு அலோக் டாண்டன் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் மத்திய சுரங்கம், நிலக்கரித்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இந்த ஒரு நாள் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.

சுரங்கத் துறையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு தேசிய அளவிலான விருது, 5-ஸ்டார் தரமதிப்பீடு செய்யப்பட்ட சுரங்கங்களுக்கான விருதுகள், 2020-21 மற்றும் தேசிய புவி அறிவியல் விருதுகள்-2019 ஆகியவை மாநாட்டின் சில சிறப்பம்சங்களாக இருக்கும்.. தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் தொழில்நுட்ப அமர்வு, சுரங்கத்தில் ஆட்டோமேஷன் குறித்த அமர்வு ஆகியவை மாநாட்டின் தொடக்க அமர்வின் ஒரு பகுதியாக நடைபெறும். பல்வேறு சுரங்க நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்கும் வட்ட மேசை விவாதங்களின் போது இந்தியாவின் சுரங்கத் துறை தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840286

•••••••••••


(Release ID: 1840340) Visitor Counter : 370