மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்தியா ஸ்டாக் அறிவு பரிமாற்றம் 2022
Posted On:
08 JUL 2022 12:16PM by PIB Chennai
நடைபெற்று வரும் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காணொலி வாயிலாக 3 நாட்கள் நடைபெறும் இந்தியா ஸ்டாக் அறிவு பரிமாற்றம் என்ற நிகழ்ச்சி ஜூலை 7-ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களை டிஜிட்டல் யுகத்துடன் இணைக்கும் மென்பொருள் தளமான இந்தியா ஸ்டாக், டிஜிட்டல் உலகிற்கு அளித்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்கும்.
துவக்க அமர்வில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அல்கேஷ் குமார் ஷர்மா, கடந்த எட்டு ஆண்டுகளில் டிஜிட்டல் உலகிற்கு மாறுவதில் நாடு சந்தித்த பல்வேறு சவால்கள் பற்றி விளக்கினார். தேசிய தகவலியல் மையத்தின் தலைமை இயக்குநர் திரு ராஜேஷ் கெரா தமது உரையின்போது, கிராமப்புற அல்லது நகர்புறங்களில் ஆகட்டும், எளிதான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதற்காக இறுதி பயனாளியை சென்றடையவும், நல்ல ஆளுகையை அளிப்பதற்கும் பின்புலமாக இருந்த ஆதார் மற்றும் செல்பேசி ஆகிய இரண்டு சேவைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
காணொலி நிகழ்ச்சியின் முதல் நாளில் 53 நாடுகளைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதுடன், 19 குறிப்பிடத்தக்க பேச்சாளர்கள் தங்களது அனுபவங்களையும், அறிவையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840024
***************
(Release ID: 1840063)
Visitor Counter : 224