நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜூன் 2022-ல் நிலக்கரி உற்பத்தி 32.57% அதிகரித்து 67.59 மில்லியன் டன்னாக இருந்தது

Posted On: 06 JUL 2022 2:47PM by PIB Chennai

ஜூன் 2022-ல் நிலக்கரி உற்பத்தி 32.57% அதிகரித்து 67.59 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 50.98 மில்லியன் டன்னாக இருந்தது. முன்னணியில் உள்ள 37 நிலக்கரி சுரங்கங்களில் 22 சுரங்கங்கள் 100 சதவீத உற்பத்தியை எட்டியது. மற்ற 9 சுரங்கங்கள் 80 சதவீதம் முதல் 100 சதவீதத்திற்குள் உற்பத்தியை மேற்கொண்டது.

  அதே நேரத்தில் நிலக்கரி விநியோகம் ஜூன் 2022-ல் 20.69 சதவீதம் அதிகரித்து 75.46 மில்லியன் டன் அளவிற்கு செய்யப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 62.53 மில்லியன் டன் அளவிற்கு செய்யப்பட்டிருந்தது.  கடந்த ஜூன் மாதத்தில் நிலக்கரியை அடிப்படையாக கொண்ட மின் உற்பத்தி 26.58 சதவீதம் அதிகரித்தது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839575

***************


(Release ID: 1839589) Visitor Counter : 206


Read this release in: English , Urdu , Hindi , Marathi , Odia