மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பிஎல்டிசி மோட்டார், மின்-ரிக்சாக்களுக்கான ஸ்மார்ட் கன்ட்ரோலர் ஆகியவற்றுக்காக ஐஐடி காரக்பூரால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பம் வணிக உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளது

Posted On: 06 JUL 2022 11:28AM by PIB Chennai

மின்சார வாகனங்களுக்கான 90%க்கும் அதிகமான உதிரிபாகங்களும் அதன் தொழில்நுட்பமும் நம் நாட்டில்  இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அவை நமது சுற்றுச்சூழலுக்கும், சாலைகளுக்கும், போக்குவரத்திற்கும் பொருந்தாத வகையில் உள்ளன என்பது உண்மையே. எனவே, இந்தச் சவாலை எதிர்கொள்ளவும், உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்சார வாகன துணை உபகரணங்களை  உள்நாட்டிலேயே தயாரிக்கும்  திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

மின்சார -ரிக்ஷாக்களுக்கான ஸ்மார்ட் கண்ட்ரோலர், பிஎல்டிசி மோட்டார் ஆகியற்றுக்கான தொழில்நுட்பத்தை மேற்கூறிய திட்டத்தின் கீழ் ஐஐடி காரக்பூர் உருவாக்கியுள்ளது. நேற்று இந்த தொழில்நுட்பம் வணிக உற்பத்திக்காக பிரஸ்லஸ் மோட்டார் இந்தியா நிறுவனத்துக்கு  அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலர் திரு அல்கேஷ் குமார் சர்மா, கூடுதல் செயலர் டாக்டர் ஜெய்தீப் குமார் மிஸ்ரா, குழு ஒருங்கிணைப்பாளர் (மின்னணுவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) திருமதி சுனிதா வர்மா, ஐஐடி காரக்பூரியைச்சேர்ந்த டாக்டர் சோம்நாத் சென்குப்தா, விஞ்ஞானி திரு ஓம் கிரிஷன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குஜராத்தின் காந்திநகரில் ஜூலை 4-ந்தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா வாரத்தின் ஒரு பகுதியாக இந்த தொழில்நுட்ப பரிமாற்றம் நடந்துள்ளது.

***************


(Release ID: 1839580) Visitor Counter : 231