மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய கல்விக் கொள்கை -2020ஐ செயல்படுத்துவதன் ஒரு கட்டமாக தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்க குடிமக்களை மையமாகக் கொண்ட கணக்கெடுப்பு மூலம் பொது ஆலோசனை

Posted On: 03 JUL 2022 2:43PM by PIB Chennai

மத்திய அரசு  2020 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இது தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை  உருவாக்குவதன் மூலம் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்த பரிந்துரைக்கிறது. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் செயல்முறை மாவட்ட ஆலோசனைக் குழுக்கள், மாநில அவதானிப்பு  குழுக்கள் மற்றும் மாநில வழிநடத்தல் குழு ஆகியவற்றின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய அவதானிப்பு குழுக்கள் மற்றும் தேசிய வழிநடத்தல் குழு போன்றவை. ஒரு தொழில்நுட்ப தளம் - இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு, வேலைகளை காகிதமில்லாத முறையில் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் போன்ற கல்வியுடன் தொடர்புடையவர்களை  சென்றடைய, கீழ்நிலை அணுகுமுறையைப் பயன்படுத்தி, மாவட்ட அளவிலான ஆலோசனைகள், மொபைல் செயலி அடிப்படையிலான ஆய்வுகள், மாநில அவதானிப்பு  குழுக்கள் மற்றும் மாநில வழிகாட்டுதல் குழு மூலம் மாநில அளவிலான ஆலோசனைகள் ஆகியவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் நடத்தப்பட்டுள்ளன. கல்வியாளர்கள், மாணவர்கள், முதலியன அடிமட்ட அளவில் மற்றும் பள்ளிக் கல்வி, குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி ஆகியவற்றின் எதிர்காலம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் திரட்டப்படும்.

தேசிய அளவிலும், தேசிய அவதானிப்பு குழுக்கள் மற்றும் தேசிய வழிநடத்தல் குழு பல்வேறு அமைச்சகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் தொடர்புகொள்வது உட்பட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கவலைகள் குறித்து ஆலோசிப்பதில் ஈடுபட்டுள்ளன. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை  உருவாக்குவதற்கு மதிப்புமிக்க உள்ளீடுகளை சேகரித்தல், தொகுத்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும். செயல்பாட்டில் பங்குதாரர்களுக்கு வழிகாட்டுவதற்காக தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆணை ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பெற்றோராகவோ அல்லது ஆசிரியராகவோ அல்லது மாணவராகவோ இருக்கக்கூடிய அல்லது இல்லாத ஒவ்வொரு பங்குதாரருக்கும் கருத்து கூற வாய்ப்பளிக்கப்படும். இந்தியாவில் கல்வி முறையின் மாற்றத்தில் பங்கேற்க விரும்பும் பொதுவான கருத்துக்களைப் பகிர்வதன் மூலம். கல்வி என்பது காலத்தின் தேவை  என்பதை அவர்கள் உணர முடியும்.

இந்தச் சூழலில், இந்திய அரசின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை ,கல்வி அமைச்சகம், ஆன்லைன் பொது ஆலோசனைக் கணக்கெடுப்பு மூலம் பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்களை பெறத் திட்டமிட்டுள்ளது, இது மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான உள்ளீடுகளைத் தொகுக்க உதவும். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் பிற அறிவுறுத்தல் பொருட்களை வடிவமைப்பதில் இது உதவும்.

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், பள்ளித் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சமூக உறுப்பினர்கள், அரசு சாரா நிறுவனங்கள், வல்லுநர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். நமது அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் உட்பட 23 மொழிகளில் இந்த ஆன்லைன் சர்வே நடத்தப்படுகிறது.

எங்களுடன் இணைந்து ஆன்லைன் கணக்கெடுப்பில் கலந்துகொண்டு, இந்தியாவில் ஒரு வலுவான, மீள்தன்மை மற்றும் ஒத்திசைவான கல்வி முறையை உருவாக்க பங்களிக்கவும். இப்போது ஆன்லைன் சர்வே எடுக்க இணைப்பை கிளிக் செய்யவும்: http://vsms.sms.gov.in/OMZhm8YvAQE

***************


(Release ID: 1838973) Visitor Counter : 260