தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சர்வதேச சேவை உதவி நிதியத்தின்கீழ், முன்மாதிரி திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டுடன் இணைந்து தொலைத்தொடர்புத் துறை ஒப்பந்தம்
Posted On:
01 JUL 2022 3:37PM by PIB Chennai
4ஜி, 5ஜி தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு உள்ளிட்ட E-band மற்றும் LTE உள்ளிட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்களின் முன்மாதிரி திட்டங்களுக்கு சர்வதேச சேவை உதவி நிதியத்தின்கீழ் நிதியளிப்பதற்கான ஒப்பந்தத்தில், தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து தொலைத்தொடர்புத்துறை கையெழுத்திட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், போட்டியை உருவாக்கவும், சர்வதேச சேவை உதவி நிதியம், சுமார் 10 கோடி ரூபாய் வீதம் 4 முன்மாதிரி திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. உள்நாட்டு நிறுவனங்களான ஆஸ்ட்ரோம் டெக்னாலஜிஸ், லேகா வயர்லெஸ் சொல்யூஷன்ஸ், ரெசோனஸ் டெக்னாலஜிஸ், சிக்னல்ட்ரான் ஆகியவை, பொதுத்துறை நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இந்த திட்டங்களை செயல்படுத்தும். மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1838558
***************
(Release ID: 1838616)
Visitor Counter : 204