சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்

Posted On: 01 JUL 2022 4:36PM by PIB Chennai

தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில்,  இணையமைச்சர்கள் டாக்டர் பாரதி பிரவீன் பவார், சுகாதாரத்துறை செயலாளர்  திரு ராஜேஷ் பூஷன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவ துறையினருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். “நமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள், நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்றும் அவர் கூறினார். அந்தவகையில் அவர்களது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவே ஆண்டுதோறும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், மருத்துவ துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவருமான டாக்டர் பி சி ராய் (டாக்டர் பிதான் சந்திர ராய்) நினைவு தினம் மருத்துவர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 75-வது சுதந்திர தின அமிர்தப்பெருவிழா  ஆண்டு என்பதால், 75 வயதுக்கும் மேற்பட்ட தலைசிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் சமுதாயத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கிய மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக, நாம் தேசிய மருத்துவர் தினத்தையும் கொண்டாடி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1838592

***************



(Release ID: 1838607) Visitor Counter : 184