நிதி அமைச்சகம்

47-வது சரக்கு மற்றும் சேவைவரி குழும கூட்டம் பரிந்துரை செய்துள்ள அனைத்து வரி விகித மாற்றங்களும் ஜூலை 18-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

Posted On: 29 JUN 2022 6:10PM by PIB Chennai

 47-வது சரக்கு மற்றும் சேவை வரி குழும கூட்டம் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி, அச்சு மற்றும் எழுது பொருளுக்கான மை, வெட்டுபலகையுடன் கூடிய கத்தி, பென்சில், ஷார்ப்னர், பிளேடு, கரண்டி, கேக் வெட்டும் கத்தி, ஆழமான குழாய்-கிணறு ஆழ்துளை கிணற்றினுள் வைக்கும் பம்புகள், தண்ணீர் பம்புகள், சைக்கிள் பம்புகள், தூய்மைபடுத்தும் இயந்திரங்கள்

முட்டைகளை வரிசைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், பழங்கள் அல்லது பிற விவசாயப் பொருட்கள் மற்றும் அதன் பாகங்கள் பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் பால் இயந்திரங்களை சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள், எல்இடி விளக்குகள், விளக்குகள் மற்றும் சாதனங்கள், அவற்றின் உலோக அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகை; வரைதல் மற்றும் குறிப்பதற்கான கருவிகள் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி  12%-லிருந்து 18%- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விதைகள், தானியங்கள் ஆகியவற்றை தூய்மைபடுத்தும் இயந்திரங்கள், தரம் பிரிப்பதற்கான இயந்திரங்கள்,  அரைக்கும் தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் (கிரைண்டர்கள்), சூரிய சக்தியால் இயங்கும் வாட்டர் ஹீட்டர்,  தயாரித்து முடிக்கப்பட்ட தோல்கள் பொருட்கள் ஆகிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 சேவை துறையை பொறுத்தவரை தோல் பதப்படுத்துதல் தொடர்பான வேலை, தோல் பொருட்கள் மற்றும் காலணி உற்பத்தி தொடர்பான வேலை, களிமண் செங்கல் உற்பத்தி தொடர்பான வேலை, மத்திய மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு முக்கியமாக நிலவேலைகள் மற்றும் அதன் துணை ஒப்பந்தங்களை உள்ளடக்கிய பணி ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்றவற்றுக்கான பணி ஒப்பந்தம்.

மத்திய மற்றும் மாநில அரசுகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோகத்திற்கான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கான உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒப்பந்தம் ஆகிய பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து  18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 எலும்பியல் சாதனம்- பிளவுகள் மற்றும் பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய, அணிந்திருக்கும் அல்லது எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1838020

***************



(Release ID: 1838078) Visitor Counter : 608